‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்ற பாடலுக்கு சொந்தக்காரி நடிகை பிரியங்கா மோகனன் தான்.! வைரலாகும் புகைப்படம்..

தற்பொழுதுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் தங்களுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை பிரியா மோகனன் மாடர்ன் உடையில் பொக்கேவை கையில் வைத்துக்கொண்டு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் பிரியங்கா மோகனன். இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

டான் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் அடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு ஜோடியாக 1980களின் பின்னணியில் எடுக்கப்படும் இந்த படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

priyanga mohan 1
priyanga mohan 1

மேலும் விரைவில் இந்த படத்தில் டீசர் வெளியாக இருக்கிறது. நடிகர் தனுஷை தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி நிறைந்த திரைப்படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்திலும் பிரியங்கா மோகனன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

priyanga mohan
priyanga mohan

இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது கிளாமர் உடையில் கைநிறைய பூக்களை வைத்துக் கொண்டு போட்டோஷூட் நடத்திய இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment