தமிழில் நடித்ததோ மூன்று திரைப்படம் தான்..! ஆனால் சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாகும் பிரியங்கா மோகன்..!

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பிரபலமானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆனால் இதற்கு முக்கிய காரணம் என்றால் டாக்டர் திரைப்படம் தான்.

பொதுவாக நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களில் இன்னும் அதிக ஆர்வம் கொண்டவர் அந்த வகையில் நமது நடிகை கன்னட சினிமா மூலம் தான் தன்னுடைய திரைப் பயணத்தை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கன்னடத்து திரைப்படத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதன் பிறகு தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நாயகியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நமது பிரியங்கா மோகன் தற்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கிராஷ் ஆக மாறிவிட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது மட்டுமில்லாமல் தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து விட்டது.

இன்நிலையில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயம் ரவி திரைப்படத்தில் கூட நடிகை பிரியங்கா மோகன் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார் அதேபோல நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் திரைப்படமான தலைவர் 169 திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

priyanga
priyanga

ஆனால் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றும் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Comment