நடிச்சது வெறும் 2 படம் தான் ஆனா தலைக்கனம் ரொம்ப ஓவர்.! பிரியங்காவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

தற்போது ஏராளமான நடிகைகள் அறிமுகமான தங்களது ஒரு சில திரைப்படங்கலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். சொல்லப்போனால் பலர் சொஷியல்மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல் வீடியோக்கள்  போன்றவற்றை வெளியிட்டு பிரபலமடைந்து பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ரீசண்டா  ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இளம் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.  தற்பொழுது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்து வருவதால் ஏராளமான இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் பிரியங்கா மோகனம் தொடர்ந்து ஏராளமான கதைகளை கேட்டு வருகிறார்.  இவர் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாதான் முன்னணி நடிகை என்ற ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இவ்வாறு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் கிளாமர் உடையைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்டனர். அதாவது அந்த தொகுப்பாளர் தற்போதெல்லாம் ஏராளமான இளம் நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் மேலும் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பிறகு உதாரணமாக குடும்பப் பெண்ணாக பார்த்த பிரியா பவானி சங்கர் மற்றும் வாணிபோஜன் தற்போதெல்லாம் கிளாமர் பக்கம் மாறி உள்ளார்கள்.  இப்படி இருக்க கூடிய நிலையில் அதுகுறித்து பிரியா மோகனன் நடிகைகள் கிளாமர் காட்டுவதில் தப்பில்லை கவர்ச்சியாக ஆடை அணிவது மற்றும் நடிப்பது அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் கொஞ்சம் கிளாமராக உடல் தெரியும்படி உடை அணிந்தால் உடனே அதனைப் பற்றி தவறாக பேசக்கூடாது.

உடை என்பது அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் இதில் யாரும் தலையிட கூடாது என்று பதில் அளித்துள்ளார். இவ்வாறு பிரியங்கா மோகனன் பதில் அளித்துள்ளதால் நெட்டிசன்கள் மிகவும் ஆபாசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment