பல வருடமாக பதுங்கியிருந்து பிரபல நடிகரின் படவாய்ப்பை தட்டி தூக்கிய ப்ரியாமணி..!

actress priyamani latest movie update: தமிழ் சினிமாவில் முதன் முதலாக கார்த்திக் நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகில் முகம் காட்டியவர் தான் நடிகை பிரியாமணி. இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இதன் மூலமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவர்க்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் முக்கிய கதாபாத்திரம் என்பதன் காரணமாக ரசிகர்களுக்கிடையே பிரபலமானது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை பிரியாமணிக்கு வழிவழியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் அவை எதையுமே பொருட்படுத்தாமல் இருந்ததன் காரணமாக தற்சமயம் பிரபல தொழிலதிபர்க்கு மனைவியாக ஆக வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையுலகில் முகம் காட்ட துடிக்கும் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதை தொடர்ந்து தற்போது வெப் தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் நமது அம்மணி சமிபத்தில் தெலுங்கு திரைப்படத்தில கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த திரைப்படமான லூசிபர் என்ற திரைப்படத்தில் தெலுங்கில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இவ்வாறு பிரபல நடிகருடன் ஜோடி சேர்வதன் காரணமாக இனி பிரியாமணியின் மார்க்கெட் வேற லெவல் என பலரும் திரையுலகில் பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் இவருக்கு பட வாய்ப்புகளுக்கு பஞ்சமே இருக்காது எனவும் பலர் கூறி வருகிறார்கள்.

priyamani
priyamani

Leave a Comment