அட பருத்திவீரன் முத்தழகா இது.! உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி விட்டாரே.!

வெள்ளித்திரையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனாலும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகைகளின் லிஸ்ட் குறைவாக உள்ளது அந்த வகையில் தனது முதல் திரைப்படத்தில் நடித்ததற்கு தேசிய விருது பெற்ற நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் பிரியாமணி.

இவர் கார்த்தியுடன் இணைந்து பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நன்றாக வசூலித்து சாதனை படைத்தது.

கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி இந்த திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக கார்த்தி இவரை முத்தழகு என கூப்பிடும் பொழுது அந்த காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக தற்போதும் திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் பிரியாமணி இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் ஆம் இவர் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

priyamani3
priyamani3

அதன் பின்பு பிரியாமணி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

priyamani4
priyamani4

அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படங்களில் உடல் எடையை சுத்தமாக குறைத்து பார்ப்பதற்கு பருவ மொட்டாக திகழ்கிறார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment