தமிழ், தெலுங்கில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகை பிரியாமணி தற்பொழுது பாலிவுட்டிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார். இவர் தமிழில் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தனது ஆரம்பக்கால திரை பயணம் குறித்து பேசி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளார்.பிரியாமணி 2003இல் தெலுங்கில் வெளியான எவரே அதகடு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பிறகு தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த காலகட்டத்தில் இவருடைய கவர்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. எனவே இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு பருத்திவீரன் திரைப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் தான் இவரின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இதன் மூலம் தேசிய விருதை வென்ற இவர் தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம் என அனைத்திலும் கலக்கி வந்த இவர் 2017ஆம் ஆண்டு தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு சமந்தா, மனோஜ் வாஜ்பாய் ஆகியோர்களோடன் இணைந்து ப்ரியாமணி நடித்திருந்த தீ பேமிலி மேன் வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் சமீபத்தில் திரையுலக வாழ்வின் ஆரம்பித்த காலம் குறித்து பேசி உள்ள பிரியாமணி தயாரிப்பாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் எனக்கு பிடிக்காத வேலையை அவர் செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.
அதாவது, நான் நடித்த ஒரு படம் பாதி முடிந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் என்னை அணுகினார் அவர் தொப்புள் அருகே பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் இது எனக்கு விருப்பமில்லை ஆனால் வேறு வெளி இல்லாமல் அதனை செய்தேன் இவ்வாறு சினிமாவில் ஹீரோயின்கள் தங்களுக்கு விருப்பமில்லாத வேலைகளை செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என கூறியுள்ளார். ஆனால் இவர் அந்த தயாரிப்பாளர் யார் என கூறவில்லை.