நடிகை பிரியா பவானி சங்கருக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமாம் – அவரே ஆசை சொன்னது.!

0
priya-bhavani-shankar
priya-bhavani-shankar

நடிகை பிரியா பவானி சங்கர் வெள்ளி திரையில் தற்பொழுது தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் பல்வேறு வேலைகளை பார்த்து உள்ளார். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

பிறகு ஒரு கட்டத்தில் வெள்ளித்திரை பக்கம் திசை திரும்பினார் எடுத்தவுடனே மேயாத மான் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஒ மன பெண்ணே, மாபியா போன்ற படங்களில் நடித்து அசத்தினார் தற்பொழுது கூட இவருக்கு இந்த வருடத்தில் மட்டுமே சுமார் ஏழு எட்டு படங்கள் வரிசைகாட்டி நிற்கின்றன.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு என்ன பிடிக்கும் என்பதை வெளிப்படையாக சொல்லி உள்ளார் .

அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம். தனக்கு பிடித்த நடிகர் மாதவன், பிடித்த ஹீரோயின் பார்வதி, பிடித்த உணவு பிரியாணி, பிடித்த லவ் ப்ரோபோசல் சீன் காக்க காக்க, பிடித்த திரைப்படம் முகவரி, பிடித்த வில்லன் அருண் விஜய்..

பிடித்த இயக்குனர் வெற்றிமாறன், பிடித்த நிறம் கருப்பு, பிடித்த வசனம் ஆறுச்சாமி, பிடித்த காமெடி நடிகர் வடிவேலு, பிடித்த இடம் சென்னையில் உள்ள என் வீடு என வரிசையாக சொல்லிக் கொண்டே போனார். இச்செய்தி தற்போது பிரியா பவானி ஷங்கர் ரசிகர்களுக்கு சற்று சந்தோஷத்தை கொடுத்துள்ளது.