திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்ட ரசிகர்.! ப்ரியா பவானி ஷங்கர் அதிரடி பதில்.!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தது இதன் மூலம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி நாடகங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் தற்பொழுது நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகளை ஓவர் டேக் செய்து நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இவருக்கு வெள்ளித்திரையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில்  இவர் கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் ஹாஸ்டல் திரைப்படம் ரிலீஸ்சாக உள்ளது.

இதனை தொடர்ந்து பத்து தல, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி வரும் இவர் சமீப காலங்களாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது என்று சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

அந்த வகையில் சமீபத்தில் ஒரு ரசிகர் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் இடம் கேட்டுள்ளார் அதற்கு இவர் புதிதாக வருபவர்களுக்கு நான் கொஞ்சம் சிக்கலான நபர் எனவே நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.