சம்திங் சம்திங் த்ரிஷா லுக்கில் பிரியா பவானி சங்கர்.! என்ன ஒரு கொள்ளை அழகு.. வைரலாகும் புகைப்படம்.

0

தற்பொழுது உள்ள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்றால் சோசியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என எப்படியாவது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது.

அந்த வகையில் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ஃபேவரட்  நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் அதன்பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

இதன்மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இவர் வெள்ளித்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவ்வாறு கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் நயன்தாரா, திரிஷா போன்றவர்களையே ஓவர்டேக் செய்து ஒன்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது அசோக் செல்வன், சிவா ஆகியவர்களுடன் ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தினை தொடர்ந்து கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் ராதா மோகனின் பொம்மை, ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன்  உள்ளிட்ட இன்னும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

priya bhavani shangar 4
priya bhavani shangar 4

இவ்வாறு மிகவும் பிஸியாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆட்டிப் படைத்து வருகிறார். அந்த வகையில் தனது ப்ளூ நிற மாடர் புடவையில் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shangar 6
priya bhavani shangar 6