விஸ்வரூபம் பட நடிகையின் மாகளா இது.? புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய திரை வாழ்க்கையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வித்தியாசமான முறையில் வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வரூபம். இந்த படம் தமிழில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா குமார் நடித்திருந்த நிலையில் அவர் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மலையாளம், தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் பூஜா குமார் 2000ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்ந்து பல ஆங்கில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றினை பெற்று கொடுத்தது.

pooja kumar 1
pooja kumar 1

மேலும் இரண்டாவது முறையாக கமலஹாசன் அவர்களுடன் இணைந்து உத்தமவில்லன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வந்த நடிகை பூஜா குமார் விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு 2020ஆம் ஆண்டு இந்த தம்பதியினர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

pooja kumar
pooja kumar

எனவே தங்களுடைய மூன்று வயது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த பூஜா குமாரின் மகளா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment