பவித்ரா விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற
சீரியலில் நடித்து வருகிறார். இவர் பகல் நிலவு, ஆபீஸ், மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு , ராஜா ராணி போன்ற பல சீரியலின் மூலம் பிரபலமடைந்தார்.
ஈரமான ரோஜாவே என்ற சீரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக விளங்குகிறது. இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இருப்பதால் இளைஞர்களும் இதனை விரும்பி பார்க்கின்றனர். வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தற்பொழுது கொரான வைரஸின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
