தவறான இடத்தை சுட்டிக்காட்டி சைஸ் என்ன என்று கேட்ட ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்த பார்வதி நாயர்.!

parvathi-nair-1

முன்பெல்லாம் நடிகைகளை பார்ப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது ரசிகர்கள் நாள்தோறும் நடிகைகளிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டு அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

இதனை பல ரசிகர்கள் ஆதரித்து வந்தாலும் ஒரு சிலர் மிகவும் கேவலமாக நடிகைகளை திட்டுவது லைவ் சேட்டில் தப்பான கேள்விகள் போன்றவற்றை கேட்டு வருபவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை அலற விட்டு வரும்  நடிகை பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் படு கேவலமாக கேட்ட ஒரு கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர்களின் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு  வெளிவந்து ஹிட் பெற்ற திரைப்படம் தான் என்னை அறிந்தால். இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் பார்வதி நாயர்.

தமிழில் இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும் இதற்கு முன்பே இவர் மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் சில திரைப்படங்கள் நடித்து  இருந்தார். இவர் துபாய் சேர்ந்தவராவார் மாடலிங்கில் அதிக ஆர்வம் உடையவர். இதன் காரணமாகவே இவர் பெரிதளவில் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல நடிகைகளும் அத்துமீறி பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பார்வதி நாயரும் பல புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் தவறான இடத்தை வைத்து உங்களுடைய சைஸ் என்ன? என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பார்வதி நாயர் கொஞ்சம் கோபப்பட்டு சூசைஸ் 37 டிரஸ் சைஸ் s என பதிலளித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து ரசிகர்களும் பல குண்டக்க மண்டக்க கேள்விகளைக் கேட்டு வந்துள்ளார்கள் அதனைத்தீர்க்கும் பார்வதி நாயர் பதில் அளித்துள்ளார்.

parvathi nair 2
parvathi nair 2

தற்பொழுது இவர் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ஹீரோவாக வைபவ் மற்றும் இவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்து வருகிறார் சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளிவந்து வைரலானது.