எட்டு வருடமாக காத்திருந்து முன்னணி நடிகரின் பட வாய்ப்பை வேட்டையாடிய பிரபல நடிகை..! யானை பசிக்கு சரியான தீனி தான் இது..!

0

actress padma priya latest news: முன்பெல்லாம் சினிமாவில் திருமணம் ஆகி விட்டாலே போதும் திரைப்பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும் ஆனால் தற்போதெல்லாம் திருமணமான நடிகைகளை தான் அதிகம் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.  தற்போது திருமணமான பிறகு எட்டு வருடம் கழித்து மீண்டும் திரையுலகில் பத்மபிரியா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

நமது நடிகை சேரன் இயக்கத்தில் வெளியான தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சத்தம் போடாதே, பட்டியல் போன்ற சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மிருகம் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு கிராமத்து கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் மிக சிறப்பாக நடித்ததன் மூலமாக இந்த படமும் மெகா ஹிட் கொடுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் மற்றும் சேரனுடன் பொக்கிஷம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என்ன தான் இவ்வளவு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் தடுமாற ஆரம்பித்துவிட்டார் இதன் காரணமாக மலையாள மொழியில் அடியெடுத்து வைத்த நமது நடிகை தற்போது தமிழில் ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்காதா என காத்துக் கொண்டிருக்கிறாராம்.

இன்நிலையில் வெகுநாள் பசிக்கு சரியான இரையானது போல இவருக்கு தமிழில் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது அதுவும்  விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படம் தான் அதவுது அஜய் ஞானமுத்து திரைப்படம் ஆகும் இந்த கோப்ரா திரைப்படத்தில் நமது பத்மபிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

பத்மபிரியா தங்கமீன்கள் திரைப்படத்திற்கு பிறகு ஆக எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் எகிறிக் கிடக்கிறது.

pathma priya-1
pathma priya-1