தீபாவளி அதுவுமாக திருமண கோலத்தில் போஸ் கொடுத்த ஓவியா அசந்து போன ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

0

oviya actress : நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதிலும் இளசுகள் மனதிலும் இடம் பிடித்தவர், களவாணி திரைப்படத்தில் கிராமத்துப் பெண் போல் நடித்து இருந்ததால் இவரை பக்கத்து வீட்டுப் பெண் என பல ரசிகர்களும் நினைத்தார்கள்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஓவியா ஒரு காலகட்டத்தில் பல வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மேலும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பலரும் ஓவியா ஆர்மி என சமூக வலைத்தளத்தில் கொண்டாடினார்கள், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா 90 எம்எல், களவாணி 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் ஓவியா பிளாக் காப்பி மற்றும் சம்பவம் என்ற 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வந்த ஓவியா நீண்ட காலம் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் திருமண கோலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது அந்த  புகைப்படங்கள்