தற்பொழுது சினிமாவில் முன்னணி நடிகர்,நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஏராளமானவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பார்கள். அதிலும் முக்கியமாக சிலர் சாப்பிடுவதற்கு வழி இன்றி கிடைக்கும் வேலைகளை செய்து வந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் குடும்ப கஷ்டத்திற்காக லாட்டரி டிக்கெட் விற்றுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டான்ஸ்சரும், நடிகையுமான நோரா ஃபதேஹி சமீப பேட்டி ஒன்றில் தனது குடும்ப வறுமையின் காரணமாகவும் தனது 16 வயதில் இருந்து வேலைக்கு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார். இவர் தமிழில் பெரிதாக பிரபலம் அடையவில்லை என்றாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கனடாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்பொழுது மும்பையில் செட்டிலாகி உள்ளார்.
அதோடு தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடும் பொழுது டான்சிங் குயினான மாதுரி திக்ஷித்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
இவர் தமிழில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த அமோக வெற்றியை பெற்ற பாகுபலி மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த தோழா ஆகிய படங்களில் தலா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் நோரா ஃபதேஹி.
இந்நிலையில் இவர் சமீப பேட்டி ஒன்றில் என் குடும்பத்தில் பணப் பிரச்சனை அதிகமாக இருந்ததால் தனது குடும்பத்தை பார்ப்பதற்காக தனது 16 வயதிலேயே வேலை செய்ய போய்விட்டதாகவும் உணவகம், பார்கள், சவர்மா நிலையம், ஆண்களின் உடைகள் விற்பனை செய்யப்படும் கடை என்று பல இடங்களில் வேலை செய்திருக்கிறேன்.

அதோடு மார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை செய்தேன் அதில் பலருக்கும் போன் செய்து லாட்டரி டிக்கெட் விற்பது தான் எனது வேலை மேலும் ஷாப்பிங் மாலில் இருக்கும் கடை ஒன்றின் சேல்ஸ் கேரளாக இருந்திக்கிறேன் இதுதான் எனது முதல் வேலை இந்த வேலை செய்ய ஆரம்பிக்கும் பொழுது எனது வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறிவுள்ளார்.