கிரிக்கெட் வீரரை கழட்டிவிட்டு ஹீரோவை காதலிக்கும் பிரபல முன்னணி நடிகை!!

actress nithiagarwal news:தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் நிதி அகர்வால் தற்போது ஹீரோவை காதலிப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடிக்க உளளார்.

அதோடு மட்டுமல்லாமல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை நிதி அகர்வால் கிரிக்கெட் வீரர கே எல் ராகுலை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதற்கு நிதி அகர்வால் அவர்கள் நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் எனக்கூறி காதல் இல்லை என மறுப்பு தெரிவித்தார்.  இந்நிலையில் மீண்டும் இவர் தெலுங்கு ஹீரோ ஒருவருடன் டேட்டிங் செல்வதாக  கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நான் யாரையும் காதலிக்கவில்லை. எனது கவனம் முழுவதும் சினிமாவில் நடிப்பது மட்டும் தான் என திட்டவட்டமாக கூறியுள்ளார். நடிகை நிதி அகர்வால் தெலுங்கு சினிமாவில் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு, ஐஸ்மார்ட் சங்கர் போன்ற  திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் வெற்றி பெறவில்லை.

எனவே தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment