தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே பல நடிகைகள் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வருவதற்கு முன்னதாகவே தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை நிதி அகர்வால்.
இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகியும் பிரபல டான்ஸ்சரும் கூட.இவர் முதன்முதலில் ஹிந்தி மொழியில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தெலுங்கு மொழியில் மிஸ்டர் மஞ்சு மற்றும் சவ்யாசாச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
ஆனால் இத்திரைப்படம் சொல்லும் அளவுக்கு இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. வசூல் ரீதியாக சொல்லும் அளவிற்கு கொடுக்காத காரணத்தினால் தமிழ் மொழியின் பக்கம் திசை திருப்பினார். தமிழ் மொழியில் நடிகர் ஜெயம் ரவி அவரது நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் இத் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்களுடன் ஈசுவரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இத்திரைப்படங்கள் இரண்டுமே சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மவுசு அதிகம் தான். ஏனென்றால் இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிதி அகர்வாலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அம்மணி பிகினி உடையில் தான் காட்சியளிப்பார். அதேபோலத்தான் மாடல் அழகியாக இருக்கும் பொழுதே பிகினி உடையில் கேட் வாக் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாக வலம் வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
