Vanniradai Nirmala: சினிமாவில் இருக்கும் ஏராளமான நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவது வழக்கமாக உள்ளது அப்படி ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் சினிமாவில் தங்களுடைய மார்க்கெட் குறைந்து என்ற பயத்திலும், ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர்களும் விவாகரத்து பெற்று பிரிவதனால் திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமலும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு நடிகைகளும் அதற்கான காரணம் வைத்திருக்கும் நிலையில் அப்படி இவ்வளவு வயதாகியும் தான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மூத்த நடிகை வெண்ணிற ஆசை நிர்மலா பேட்டியில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, என்னை எங்கு சென்றாலும் நீங்கள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் கோபிநாத் மேடையிலேயே எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். என்னுடைய அழகுக்கு முதல் காரணம் நடனம் தான் இன்னொன்று நான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. நான் ஒருவேளை குடும்ப வாழ்க்கை ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொண்டிருந்தால் இந்த அழகு இருந்திருக்காது என்னமோ.
நான் சினிமா துறையில் இருக்கும் பொழுது நிறைய நடிகர்கள் நம்மை அவர்கள் வலையில் விழ வைக்க பார்ப்பார்கள் அது எனக்கும் நிறைய நடந்திருக்கிறது. நான் கல்யாணம் செய்யாததற்கு முக்கியமான காரணம் என்னுடைய தந்தையார் தான். நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது நடனமாட வேண்டும் என மிகவும் விரும்பினேன் அப்பாவுடன் இருக்கும் வக்கீல்கள் பலர் நாளை கல்யாணம் செய்து வேறு வீட்டிற்கு செல்ல போகிற எதுக்கு டான்ஸ் டான்ஸ் என்று ஏன் இவ்வளவு செலவு செய்கிறார் என்று கேட்டார்கள்.
என்னுடைய குடும்பம் மிகவும் பாரம்பரியமான ஒழுக்கமான குடும்பம் நான் இப்படி டான்ஸ் ஆடுவதை பார்த்து என் வீட்டு சொந்தக்காரர்கள் என்னிடம் வந்து நீ இப்படி டான்ஸ் ஆடக்கூடாது நீ டான்ஸ் ஆடுவதனால் தான் அப்பா இப்படி துள்ளி குதிக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது என்னுடைய அப்பா எல்லா பெண்களைப் போல என்னுடைய மகள் கல்யாணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டிற்கு செல்லக்கூடியவள் அல்ல அவள் சாதனையை படைக்க பிறந்தவள் என்றார் அவர் சொன்னது என்னுடைய ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது என கூறியிருக்கிறார்.