என்னுடைய கனவை நிறைவேற்றிய திரைப்படம்தான் ராஜவம்சம்..! பிரமோஷனில் ஓபனாக பேசிய நடிகை நிக்கி கல்ராணி..!

தமிழ் சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி இயக்கத்திலும் தன்னுடைய திறனை வெளிகாட்டி ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சசிகுமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது சுந்தர் சி யின் உதவி இயக்குனராக பணிபுரிந்த கதிர்வேல் இயக்கத்தில் ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் மேலும் இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது உறவுகளின் பெருமைகளை மிக தெளிவாக ரசிகர்களுக்கு காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக சசிகுமார் தான் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் சென்டிமென்ட் காட்சிகள் இருக்கும் வகையில் தான் தேர்ந்தெடுப்பார் அந்த வகையில் ராஜ வம்சம் திரைப்படம் முழுக்க முழுக்க கமர்சியல் ஆன சென்டிமென்ட் திரைப்படம் ஆகும்

இவ்வாறு இந்த திரைப்படத்தில் இதர கதாபாத்திரத்தில் யோகிபாபு சதீஷ் தம்பி ராமையா விஜயகுமார் மனோபாலா ரேகா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் பொதுவாக யோகி பாபு ஒரு திரைப் படத்தில் நடித்தாலே அந்த திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.

அந்த வகையில் இத்திரைப்படமும் நல்ல காமெடி கலந்த கமர்சியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இத் திரைப்படமானது வருகின்ற இருபத்தி ஆறாம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் அப்போது இந்த திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.  மேலும் பெரிய குடும்பத்தில் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை அந்த வகையில் என்னுடைய ஆசையை இந்த திரைப்படம் நிவர்த்தி செய்துள்ளது.

rajavamsam

அதுமட்டுமில்லாமல்  ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த அனுபவத்தை இந்த திரைப்படம் எனக்கு கொடுத்துள்ளது. அந்தவகையில் குடும்பத்தோடு இந்த திரைப்படத்தை ரசிப்பதற்காகவே நமது இயக்குனர் திரையில் தான் வெளியிடுவேன் என அடம்பிடித்து வருகிறாராம்.

சமீபத்தில்  சசிகுமார் மற்றும் ஜோதிகா உடன்பிறப்பு என்ற திரைப்படம் வெளியாகியது திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மட்டுமில்லாமல் நல்ல சென்டிமென்ட் திரைப்படமாக அமைந்தது இது போன்ற திரைப் படத்தை இணையத்தில் பார்ப்பதைவிட குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்ப்பதுதான் நல்ல அனுபவமாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு ராஜவம்சம் திரைப்படத்தை திரையில் வெளியிட பல்வேறு முயற்சிகளை தயாரிப்பாளர்கள் செய்துள்ளார் என ராஜவம்சம் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment