நடித்த முதல் திரைப்படம் மெகா ஹிட் நான்கு வருடமாக நடிக்காதது ஏன் விளக்கம் கொடுத்த நடிகை.!

0

பொதுவாக பல நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவர் மத்தியிலும் தனக்கென ஓர் இடத்தை பிடித்து விட்டது அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் சில நடிகைகள் உள்ளார்கள்.

அந்த வகையில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அருவி. இத்திரைப்படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனாலும் கூட இதுவரையிலும் இத்திரைப்படத்தினை மறக்க முடியாமல் இருந்து வருகிறது அதோடு இத்திரைப்படத்தை பலரும் பாராட்டினார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன்.

இவரின் நடிப்பைப் பார்த்து பலரும் வியந்தார்கள் அந்தவகையில் திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என்று அனைவரும் இவரை பாராட்டினார்கள். இத்திரைப்படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார்.இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்து இருந்தார்கள்.

அருவி திரைப்படத்திற்கு பிறகு ஒரு அந்தலாஜிக் திரைப்படத்தில் மட்டும் நடித்து இருந்தார். இவர் இத்திரைப்படத்திற்கு பிறந்த நான்கு வருடங்களாக நடிக்காத காரணத்தினால்  பலர் இவரை ஏன் நான்கு வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்தீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு அதிதி பாலன் இந்த இடைவெளி உங்களுக்கு நீண்ட காலங்கள் போல் தெரியலாம் ஆனால் நான் சினிமாவை புரிந்துக் கொள்வதற்காக எடுத்த ஒரு நல்ல வழி என்று கூறியிருந்தார்.

athithi palan
athithi palan

அதோடு இந்த இடைவெளி நேரத்தை சினிமாவை பற்றி புரிந்து கொள்வதற்காகவும், நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்றாக புரிந்துக்கொண்டேன் இந்த இடைவெளி ஒரு நன்றாக இடைவெளியாக எனக்கு அமைந்துள்ளது என்று கூறியிருந்தார். இவர் நடிப்பில் நேற்று மலையாளத்தில் கோல்டு கேஸ் திரைப்படம், வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து படவேடு என்ற மலையாளத் திரைப்படத்திலும் நவராசா  என்ற தமிழ் திரைப்படத்திலும், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.