தற்பொழுது எல்லாம் சினிமாவில் பிரபலமடைவதற்கு பல வழிகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது உள்ள நடிகைகள் கிளாமராக ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் போதும் அவர்களுக்கென்று எளிதில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.
எனவே இவர்களுக்கு ரசிகர் மத்தியில் மவுசு அதிகமாக இருந்தால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று அனைவரும் அந்த நடிகையின் வீட்டுக்கு நேரில் சென்று தங்களது திரைப்படங்களில் நடிப்பதற்கு அவர்களை ஒப்பந்தமாகி வருகிறார்கள்.
அப்படி ஒப்பந்தம் ஆனாலும் கூட இவர்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஒரு திரைப்படத்தை முழுவதுமாக தயாரித்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடவேண்டும். ஏனென்றால் அந்த நடிகைகள் கேட்கும் அனைத்து விஷயங்களையும் தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக செய்து தர வேண்டும்.
அப்படி செய்தாலும் கூட ஒரு சில பிரச்சனைகள் வரும் அதையும் சகித்துக்கொண்டு இழுத்து வைத்து அதை திரைப்படத்தை முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் ஒரு வழியாகி விடுவார்கள். ஆனால் முன்பெல்லாம் அப்படி கிடையாது ஒரு நடிகை பிரபலம் அடைய வேண்டும் என்றால் அவர் கிட்டத்தட்ட ஒரு 10 படங்களாவது நடித்து இருந்தால் மட்டுமே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியும்.
வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை தேடி ஆபீஸ் ஆபீஸ்சாக அலைய வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவ பொழுதெல்லாம் கேரவன் கிடையாது. எனவே எங்கு சென்றாலும் மறைவாக உள்ள இடத்தில் உடையை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.
இப்படிப்பட்ட நிலையிலும் ஒரு நடிகைக்கு மட்டும் தயாரிப்பாளர்கள் பார்த்து பார்த்து செய்தார்கள். ஆம், அவர் வேறு யாரும் இல்லை நடிகை கௌதமி தான். இவர் சினிமாவிற்கு அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே 36 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
தற்பொழுது வரையிலும் இவர் அளவிற்கு எந்த நடிகையும் இரண்டு வருடங்களில் 36 திரைப்படங்களை நடித்தது இல்லை இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. முக்கியமாக கௌதமியின் சினிமா வாழ்க்கையில் கால்ஷீட் பிரச்சனை வந்ததே கிடையாதாம்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் கௌதமி பொதுவாக தென்னிந்திய மொழிகளில் எந்த படத்தில் நடித்திருந்தாலும் சொல்லும் நேரத்திற்கு கரெக்டாக நடித்துக் கொடுக்கும் கேரக்டர் உடையவராம். இதன் காரணமாகவே தயாரிப்பாளர்கள் இவருக்கென்றால் மட்டும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வார்களாம்.

இந்த தகவல் பல ஆண்டு காலத்திற்கு பிறகு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலர் இப்படியும் ஒரு நடிகை இருக்க முடியுமா என்று கூறிவருகிறார்கள்.