குடிப்பீங்களா என கேட்ட ரசிகருக்கு.. அவர்கள் பாணியிலேயே பதிலளித்த நடிகை..

0

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை நீலிமா ராணி. இவர் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. ஆனால் சின்னத்திரையில் இவர் நடிப்பில் வெளிவந்த மெட்டி ஒலி, கோலங்கள் மற்றும் அத்திப்பூக்கள் போன்ற சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வந்த இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலமடையவில்லை அதன் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அந்த வகையில் நான் மகான் அல்ல, மன்னர் வகையறா ஆகிய திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கடைசியாக இவர் சக்ரா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் சமீப காலங்களாக சில சீரியல்களை தயாரித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் மற்றும் வெள்ளித் திரை நடிகர்கள் என்று அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதுவும் ரசிகர்கள் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் நீலிமாராணியிடம் ஒரு ரசிகர் குடிப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு சற்று கூட யோசிக்காமல் நீலிமாராணி அதிகமாக தண்ணீர் குடிப்பேன் மற்றும் ஜூஸ் குடிப்பேன் என்று யோசிக்காமல் பதிலளித்துள்ளார். அந்த ரசிகர் சரக்கு குடிப்பீங்களா என்று தெளிவாக கேட்காமல் குடிப்பீர்கள் என்று மொட்டையாக கேட்டதால் நீலிமாராணி யோசிக்காமல் பதிலளித்துள்ளார்.