கதாநாயகியாக கால்தடம் பதிப்பதற்கு முன்பே விளம்பர படத்தில் நடித்த நயன்தாரா..! அதுவும் இப்படி ஒரு விளம்பரத்திலா..?

0

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. அவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை நயன்தாரா திரை உலகில் முதன்முதலாக ஐயா திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.  இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளை பெற்ற நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றது மட்டுமல்லாமல் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது நயன்தாராதான்  ஏனெனில் அந்த அளவிற்கு தமிழ் சினிமா இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் அதிக அளவு நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிகை நயன்தாரா திரையில் நடிப்பதற்கு முன்பாகவே தொகுப்பாளினியாக பணியாற்றியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சில விளம்பர படங்களிலும் கூட நடித்துள்ளார். அப்பொழுது இவர் நடித்த விளம்பர படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவா இது என ஆட்சியர் எச்சரிக்கிறார்கள்.