தயாரிப்பாளர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை நயன்தாரா – இப்போ கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் அஜித், விஜய், ரஜினி, சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மேலும் சில படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர்.

நயன்தாரா தமிழை தவிர தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். தற்போது தமிழில் தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதை தொடர்ந்து கனெக்ட் என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

மேலும் நயன்தாரா மலையாளத்தில் கோல்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படிப் பல மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாலிவுட்டிலும் களமிறங்கி உள்ளார்.

இந்த நிலையில் தற்போது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் உள்ளவர் நயன்தாரா தான் இருந்தும் அவரது சம்பளத்தை இனி நடிக்க உள்ள படங்களில் அதிகரித்து உள்ளாராம். அந்த வகையில் அஜீத்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்திற்கு சம்பளமாக நயன்தாரா 10 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். தனது சம்பளத்தை பல மடங்கு உயர்ந்து கொண்டே போகும் நயன்தாரா அடுத்தடுத்து கமிட்டாக உள்ள படங்களுக்கு 15 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment