ஒரே நேரத்தில் அதிரடியாக களமிறங்கும் நயன்தாரா, தமன்னா,வாணி போஜன்!! காரணம் இது தான்…

vanibhojan1
vanibhojan1

actress nayanthara, thamana,vanibhojan giving gift surprise to their fans information viral: தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது இதனால் முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் வேறு வழியில்லாமல் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் போன்றவை வெளியாக உள்ளது. எனவே காஜல் அகர்வால் ,ஆனந்தி, வைபவம் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான “லைவ் டெலிகாஸ்ட்” என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஜெய்,வாணிபோஜன் நடிப்பில் “டிரிபல்ஸ்”,  தமன்னா நடிப்பில் “நவம்பர் ஸ்டோரி”, மற்றும் சத்தியராஜ், சீதா, ரக்ஷன் நடிப்பில் “மை பர்பெக்ட் ஹஸ்பண்ட்” போன்ற பல வெப் சீரிஸ்கள் இந்த தீபாவளிக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது எனவே பல நட்சத்திரங்களின் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு நல்ல விருந்து அளிக்கப் போகிறது. மேலும் இந்த தீபாவளியை ஹாட்ஸ்டார் தீபாவளி என்று கூறலாம்.