நயன்தாரா விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு இவ்வளவா செலவு பண்ணியிருக்காங்க!! எம்மாடி …

0

actress nayanthara spend this much amount to vignesh shivan birthday:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு தகுதியானவர் என்று தனது திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

இவர் சினிமா நடிகையாக மட்டும் அல்லாமல் இவரின் வீரமான பேச்சை பார்த்து தற்போது உள்ள சாதாரணமான பெண்களும் கூட இவரை ரோல் மாடலாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள். இவர் எப்பொழுதும் எந்த பேட்டியாக இருந்தாலும் யாரையும் நம்பாதீர்கள் உங்களை நீங்களே நம்புங்கள் உங்களுடைய ஆசைக்காக வாழுங்கள் பிறரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் சந்தோஷமாக வாழவே முடியாது என்று அனைவருக்கும் அறிவுரைகளை கூறுவார்.

இந்த நிலையில் இவர் பல நடிகர்களை காதலிக்கிறார் என்று பல சர்ச்சைகள் எழுந்தாலும் தற்பொழுது உண்மையாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களில் திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த எந்த ஒரு படமும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் நயன்தாராவின் மூலம் தற்போது பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தற்போது இரண்டு காதல் படங்களை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படங்களில் நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்களாம்.

இந்த நிலையில் தற்போது கொரோனா முடிந்து ஊர் ஊராக சுற்றி வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது விக்னேஷ் சிவன் பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக நயன்தாரா நடத்தியுள்ளார். தன் காதலனுக்காக நயன்தாரா 25 லட்சம் ரூபாய் பிறந்தநாளுக்காக மட்டுமே செலவழித்து உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது.