தமிழகத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

kathu vakula 2 kadhal
kathu vakula 2 kadhal

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம்தான் காத்துவாக்குல 2 காதல். இந்த திரைப்படத்தினை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்றும் காமெடி நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்றும் பலர் கமெண்ட் செய்து இருக்கிறார்கள் இன்னொரு புறம் சமந்தாவின் டபுள் மீனிங் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் ரிலீஸ்சாகும் அன்று சமந்தாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருந்தார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருந்தாலும் வசூல் குறைவாகத்தான் உள்ளது என்று கூறப்படுகிறது. பிறகு சமந்தா தான் திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி உளளார்கள். பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு மட்டும் ஹோம்லியான கெட்டப்பிலும், சமந்தாவிற்கு கிளாமர்  கேரக்டரையும் கொடுத்ததால் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொள்ள போவதால் நயன்தாராவை மட்டும் அழகாக காட்டியுள்ளார் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பற்றிய வசூல் இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூபாய் 66 லட்சம் வசூலிக்க, தமிழகத்தில் ரூபாய் 5 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2-வது நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக ரூபாய் 8 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாம்,எனவே தற்போது குறைவான வசூலாக இருந்தாலும் வரும் நாட்களிலும் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.