இது நடந்த தான் கல்யாணம் எனக் கூறிய நயன்தாரா!! அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்…அவ்ளோதான் எல்லாம் எனக் கூறும் ரசிகர்கள்..

0

actress nayanthara marriage : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் ஒன்றாகவே ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு அவர்களோ இந்த காதல் வாழ்க்கை போரடித்தால் திருமணம் செய்து கொள்வோம் என கூறினர்.

இவர்கள் இருவரும் ஒன்றாகவே எப்போதும் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது கூட ஊரடங்கு தளர்வு முடிந்ததும் கோவாவிற்கு  சென்று அங்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் தற்போது சமூக வலைத்தளத்தில் புதிதாக வதந்தி ஒன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா அவர்கள் தேசிய விருது பெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வார் என முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே அறம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் மிஸ் ஆனது. எனவே எப்போது விருது கிடைப்பது எப்போது திருமணம் நடப்பது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரம் நயன்தாரா இப்படி திருமணத்தை தள்ளி வைத்தால் அவருக்கு திருமணம் நடக்காது ஏற்கனவே இது போல இரண்டு தடவை நடந்தள்ளது எனவும் கூறுகின்றனர். இதனை அறிந்த விக்னேஷ் சிவன் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.