நயன்தாராவின் இடத்தை பிடிக்க வெறி கொண்ட வேங்கையாக மாறிய பிரபல முன்னணி நடிகை..! இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா..?

actress nayanthara place occupying that actress aim : சமீபத்தில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் ஆனது தமிழ் சினிமாவில் மிக அதிகமாகிக்கொண்டே போகிறது.அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னிலை வகிக்கிறார்.

அந்த வகையில் நயன்தாராவிற்கு டஃக்ப் கொடுக்கும் அளவிற்கு ஆந்திர பேரழகி அனுஷ்கா செட்டி சினிமாவில் மிகப்பிரபலமாக வளம் வந்தார். இவர் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த இரண்டு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கி உள்ளார்.

இவ்வாறு தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே நடிகை அனுஷ்கா மிகவும் பிரபலமாகி விட்டார் இதற்கு முக்கிய காரணமே “மொபைலா மொபைலா” என்ற பாடல்தான் காரணம் எனவே இந்த பாடலுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக அனுஷ்கா நடனமாடி இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன்பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனுஷ்கா இவர்கள் திரைப்படத்திற்காக தனது உடல் பருமனை மிக அதிகமாக ஏற்றிவிட்டார்.

அதன் விளைவாக அந்த உடல் எடையை அவரால் சுத்தமாக குறைக்கவே முடியவில்லை.  இதனாலே அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது.  இந்நிலையில் நயன்தாராவின் மவுசு அதிகரித்ததன் காரணமாக தற்சமயம் நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது உடல் எடையை மிகக் கணிசமாக குறைத்த நடிகை அனுஷ்கா சமீபத்தில் விட்டதை விட்ட இடத்தில் தான் தேட வேண்டும் என மிக பிரம்மாண்டமாக சினிமாவில் களம் இறங்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழில் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம் மேலும் தெலுங்கிலும் நம்பர் ஒன் நடிகையாக ஆகவேண்டும் என வெறியுடன் இருக்கிறாராம்.

anushka shetty
anushka shetty

Leave a Comment