சரியான நேரம் பார்த்து நாள் குறித்த நடிகை நயன்தாரா..! காத்துவாக்குல ரெண்டு காதல் ரிலீஸ் தேதி இதோ..!

0

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் நடிப்பில் தற்சமயம் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தது ஆனால் இதில் எந்த ஒரு திரைப்படமும் உண்மையில் வெற்றி பெறவில்லை.

பொதுவாக விஜய் சேதுபதி தான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கர்வம் கொண்டவர் கிடையாது ஆகையால் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக நடித்து கொடுப்பதில் வல்லவர் ஆனால் சில காலமாகவே கதையில் கவனம் செலுத்தாத காரணத்தினால் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் மறுபடியும் விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை உயர்த்தும் திரைப்படமாக காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தான் உருவாக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள் அதில் ஒருவர் நயன்தாரா மற்றொருவர் சமந்தா ஆகும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இதற்கு முன்பாகவே விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து அதுமட்டுமில்லாமல் அனிருத் இசையமைப்பில் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் ராம்போ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் காதீஜா என்ற கதாபாத்திரத்தில் சமந்தாவும் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளார் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.