விட்ட போதும்டா சாமி என பலவருடமாக பிரபல நடிகரின் லிப்லாக்கில் சிக்காமல் எஸ்கேப் ஆகும் நடிகை நயன்தாரா..!

nayanthara-kamal
nayanthara-kamal

actress nayanthara why not acting kamal movie: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைப்பார்கள். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான்.

இந்நிலையில் பிரபல முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க மறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரை கண்டாலே தெரித்து ஓடி விடுகிறாராம்.

தமிழ் திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகை நயன்தாரா முதன் முதலில் திரை உலகில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருடனும் திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை நயன்தாரா பிரபல நடிகர் உலக நாயகன் கமலஹாசனுடன் மட்டும் இதுவரை திரைப்படம் நடிக்க தயங்கி வருகிறாராம்

கமலஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகியை எப்படியும் முத்தம் கொடுத்து விடுவார் என்ற காரணத்தினால் தான் நயன்தாரா அவர் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

ஆனால் நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் கவர்ச்சியில் தாண்டவம் ஆடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் பல நடிகருடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார் இந்நிலையில் கமலஹாசனுடன் மட்டும் ஏன் நடிக்க மாட்டேன் என்கிறார் என்பது தான் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

nayanthara-kamal
nayanthara-kamal