லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப் படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் இதோ.!

பொதுவாக சினிமா என்றாலே நடிகைகளை விடவும் நடிகர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் இருந்து வருகிறது. ஒரு திரைப்படத்தில் முன்னணி நடிகர், நடிகை நடித்தால் அந்த திரைப்படத்தில் அந்த நடிகரைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது பெரும்பாலும் நடிகைகளின் நடிப்பை பற்றி பேசப்படுவதில்லை.

என்னைப் பற்றி ஏராளமான நடிகைகள் பல பேட்டிகளில் கூறி உள்ளார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் இருக்கிறதோ அதே போல் நடிகைகளுக்கும் இருக்க வேண்டும் என்று கதையை தேர்ந்தெடுத்து நடித்து தற்பொழுது நடிகைகளும் நடிகர்கள் அளவிற்கு சினிமாவில் வளர முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து   காத்து வாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ப்ரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் இறுதிகட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.எனவே விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் திரில்லர் மூவியான கனெக்ட் திரைப்படத்திலும், லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன்,நயன்தாரா இருவருக்கும் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போதைய திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Leave a Comment