புதிய திரைப்படத்தில் கமிட்டான நடிகை நயன்தாரா.! அட, இவர் வடிவேலு படத்தின் இயக்குனராசே.!

0

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகை நயன்தாரா இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார். இவர் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போல  பாலிவுட் டோலிவுட் போன்ற மற்ற திரைவுலகில் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

ஏனென்றால், கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வந்த பலர் மற்ற திரையுலகிற்கு அறிமுகமாகி தங்களது மொத்த மார்க்கெட்டையும் இழந்தவர்கள் பலர் உள்ளார்கள். எனவே நயன்தாரா தற்போது சினிமாவின் புகழின் உச்சத்தில் இருப்பதால் மற்ற மொழிகளில் நடித்து தனது இமேஜை டேமேஜ் செய்ய வேண்டாம் என்று தமிழிலே நடித்து வருகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இவர் நடிப்பில் கடைசியாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓட்டிட்டு வழியாக வெளிவந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தனது காதலர் தயாரித்துள்ள  நெற்றிக்கண் திரைப்படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளார் இத்திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

அதன் பிறகு தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் நடிகர் வடிவேலுவின் இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனருடன் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக கைகோர்த்து உள்ளதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு ஹீரோவாக நடித்திருந்த தெனாலிராமன், எலி போன்ற திரைப்படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கமிட்டாகிவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறார்கள். இதனை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.