தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நயன்தாரா. பொதுவாக சினிமா என்றாலே நடிகைகளை விடுவும் நடிகர்களுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கும் அது சம்பளமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாக இருந்தாலும் நடிகர்ளுக்கு தான் முன்னுரிமை.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை நயன்தாரா மட்டும்தான். லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதோடு தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார்கள்.
இந்த நிறுவனத்தின் முதல் படமாக நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாரா கண் தெரியாத பெண்ணாக நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இத்திரைப்படம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக அமைந்தாலும் நயன்தாரா முதன் முறையாக கண் தெரியாத பெண் வேடத்தில் நடித்துள்ளதால் தற்போது இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மூக்குத்தி அம்மன் மற்றும் மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாத்த, நெற்றிக்கண் இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அதோடு காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு வெள்ளித்திரையில் பிசியாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.
