தங்கம், வைரம் என பல கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்துக் கொண்டு மகாராணிக்கே டஃப் கொடுக்கும் அழகில் நடிகை நயன்தாரா.! லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கிலோ கணக்கில் வைர, தங்க நகைகளை அணிந்துக் கொண்டு போட்டோஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட தென்னிந்திய சினிமாவில் 19 வருடங்களாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

பல சர்ச்சைகள் மற்றும் சவால்களை சந்தித்து சாதித்து காட்டி கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் என்ற மாபெரும் அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது யாரும் தொட முடியாத அளவிற்கு சினிமாவில் உயர்ந்து இருக்கிறார். மேலும் கதையின் அழகியாக O2 மற்றும் கனெக்ட் ஆகிய இரண்டு படங்களும் வெளியான நிலையில் இந்த படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் தற்பொழுது இவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இதனை அடுத்து தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் மற்றும் ராகவா லாரன்ஸ் சக ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

nayanthara 1
nayanthara 1

அது மட்டுமல்லாமல் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்திற்காக ஏகே 62 படத்தின் கதையை எழுதிய நிலையில் தற்பொழுது அந்த ஸ்கிரிப்ட் அஜித்திற்கு பிடிக்காமல் போனதால் இந்த படத்தில் மற்றொரு நடிகரை வைத்து அதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையிலும் வெளியாகவில்லை.

nayanthara 2
nayanthara 2

இப்படிப்பட்ட நிலையில் இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நயன்தாரா கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகளை அணிந்துக் கொண்டு மகாராணிக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பேரழகில் இருக்கும் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பிறகு அந்த படங்கள் நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

NAYANTHARA
NAYANTHARA

Leave a Comment