2021-ல் ரவுண்ட் கட்டி கலக்கப்போகும் நடிகை நயன்தாரா..! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்..!

actress nayanthara latest movie update: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வளம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்து மெகா ஹிட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்சமயம் முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை என்றால் அது நயன்தாரா தான்.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை நயன்தாரா தற்சமயம் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக தேடி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு அவர் நடிக்கும் அனைத்து படங்களுமே மெகா ஹிட் அடித்து வருகிறது.

அந்தவகையில் நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய  இரண்டு திரைப்படங்களுமே வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் தற்போது வருகின்ற 2021 ஆம் ஆண்டில் மிகவும் பிஸியாக இருக்க போகும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான் என இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து காத்துவாக்குல 2 காதல் மற்றும் நெற்றிக்கண் மற்றும் மலையாளத்தில் நிழல் என்னும் திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் இந்நிலையில் வீர மங்கை என்னும் வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றில் நடிகை நயன்தாரா நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நடிகை நயன்தாரா 2021 ஆம் ஆண்டு மிக பிஸியான நடிகை என அவருடைய ரசிகர்கள்  அதை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

nayanthara-jpg
nayanthara-jpg

Leave a Comment