தொடர்ச்சியாக நயன்தாராவின் திரைப்படத்தை குறிவைத்து தூக்கும் ஹாட்ஸ்டார் நிறுவனம்..! அடேங்கப்பா இந்த படத்துக்கு இவ்வளவு விலையா..!

0

actress nayanthara latest movie update: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக போற்றப்படுபவர் தான்  நடிகை நயன்தாரா இவர் ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை அதன்பிறகு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் தற்போது அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு அவர் நடிக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்று தருவது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்துக்கட்டி வருகிறது அந்த வகையில் சோலோ ஹீரோயினாக சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன்.

இத் திரைப்படமானது பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதன்காரணமாக நயன்தாராவின் மவுசு ஆனது திரையுலகில் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா பார்வை இன்றி நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தையும் இந்த  ஹாட்ஸ்டார்  நிறுவனம் வாங்கி விட்டதாம் அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிக அதிக விலை கொடுத்து வாங்கிய ஹீரோயின் திரைப்படம் என்றால் அது நமது நயன்தாராவின் நெற்றிகண் திரைப்படம் தான்.

இவ்வாறு இத் திரைப்படமானது இதுவரை யாரும் எதிர்பார்த்திராத விலைக்கு போனதன் காரணமாக திரையுலகில் பல்வேறு பிரபலங்களும் ஆச்சரியத்தில் உள்ளார்கள் இத் திரைப்படமானது 15 கோடிக்கு விலை போயுள்ளதாம். இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படத்தின் ரீமேக் என விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா ரசிகர்கள் சைக்கோ திரைப்படமே கொரியன் திரைப்படத்தின் காப்பிதான் என கூறி உள்ளார்கள். எது எப்படியோ இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி ஹாட்ஸ்டார்  தளத்தில் வெளியாக உள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

nayanthara-1
nayanthara-1