actress nayanthara latest cute image: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கேரளாவை பிறப்பிடமாகக் கொண்டாலும் அவரை வளர்த்து விட்டு தற்போது அழகு பார்த்து வருவது என்னமோ தமிழ் சினிமாதான்.
சரத்குமார் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐயா இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது திரைப் பயணத்தை மேற்கொண்டார் அதன்பின் கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்த நயன்தாரா மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார்.
அதே போல சினிமாவிலும் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது கூட இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பக்கம் சினிமா உலகில் பிஸியாக இருந்தாலும் மீதி நேரத்தில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஊரை சுற்றி வருகிறார்.
சமீபகாலமாக ஊர்சுற்றி வந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த நயன்தாரா திடீரென தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வண்ணம் இருந்து வருகிறார் அந்த வகையில் பட்டுபுடவையில் கண்ணைப் பறிக்கும் கொள்ளை அழகில் இருக்கும் நயன்தாராவின் கியூட் புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.


