கெட்டிமா புடிச்சுக்கோங்க ஓடிட போறாங்க..! ஆசை காதலனுடன் திருப்பதியில் நடிகை நயன்தாரா..!

0

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் இயக்குனர்களில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒருவர்.  இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் தனது காதலி நயன்தாராவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக போட்டிருப்பார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது  ஒரு காமெடி காதல் கலந்த ஆக்சன் திரைப்படம் என்ற காரணத்தினால் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகள்  சொல்லித்தரும் போது நயன்தாராவுக்கு தன்னுடைய காதலையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது இருவரும் காதலர்களாக வலம் வருவதும் மட்டுமில்லாமல் நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவன் பெருமையாக பேசுவதும் விக்னேஷ் சிவனை பற்றி நயன்தாரா பெருமையாக பேசுவதும் வழக்கமாக இருந்துவருகிறது.

அந்த வகையில் இவர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் அடிக்கடி சுற்றுலா செல்வதும் அங்கு புகைப்படம் எடுத்துக் கொள்வதும் வழக்கம் தான் இவ்வாறு இவர்கள் காதலை சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வபோது வெளிக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் வாங்குவதற்காக சென்றுள்ளார்கள். அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கையை மிக இறுக்கமாக பிடித்துக்கொண்டு  இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு  விதமாக கிண்டலடிக்க வருகிறார்கள்.

vignesh shivan-1
vignesh shivan-1

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இவர்கள் இருவரும் திரைப்படங்களில் பிஸியாக இருப்பதன் காரணமாக இவ்வாறு தங்களுடைய பணிகளை முடித்ததன் பிறகாக இவர்கள் இருவரும்  அனைவருடைய முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இது எப்பொழுது தான் என்பது ரசிகர்களுடைய கேள்வியாக இருந்துவருகிறது.