இன்று தனி விமானத்தில் செல்லும் நயன்தாரா!! தனது முதல் படத்திற்காக கேரளாவிலிருந்து எப்படி வந்தார் தெரியுமா!!

0

Nayanthara how she came to tamilnadu from kerala: லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ்  திரை உலகிற்கு ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் கைவசம் பல படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் ஓணம் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளா பறந்து சென்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

இதனை பார்த்த சிலர் இவர் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது ஆரம்ப காலகட்டத்தில் சரத்குமாருடன் இணைந்து ஐயா என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்போது பட ஷூட்டிங்குக்காக கேரளாவிலிரந்து தனது அப்பா அம்மாவுடன் பேருந்தில் வந்துள்ளார்.

ஆனால் தற்போது இவர் அடைந்த வளர்ச்சியின் காரணமாக தனி விமானத்தில் கேரளாவிற்கு செல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவரின் கடின உழைப்பு தான் அவரை இவ்வளவு பெரிய இடத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று  கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.