தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர்ஸ்டார் என தலையை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து ஜோடியாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு காதலியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய ஆசை காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காற்றுவாக்கில் 2 காதல் என்ற திரைப்படம் மட்டுமன்றி கனெக்ட் என்ற திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் அதே போல மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் கோல்ட் என்ற திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா தான் கதாநாயகி.

மேலும் இவ்வாறு உருவாகும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரித்விராஜ் மற்றும் நாயகியாக நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்து உள்ளார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது என திரைப்பட இயக்குனர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.