வளைந்து கொடுக்காத நயன்தாரா! பிரசாந்த் படத்திலிருந்து தூக்கி வீசப்பட்டாரா.? கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ.?

0

actress nayanthara controversy with prasanth:தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஆகா ஓகோன்னு வந்த பின்பு காணாமல் போய்விடுவார்கள், அந்த வகையில் வாரிசு நடிகராக இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி ஒரு காலகட்டத்தில் ரஜினிக்கு அடுத்த நாயகனாக உருவெடுத்தவர் நடிகர் பிரசாந்த்.

பிரசாந்த் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது, இது அனைவருக்கும் தெரிந்ததுதான், தற்பொழுது அஜித், விஜய் இருக்கும் இடத்தில் ஒரு காலகட்டத்தில் இருக்க வேண்டியது பிரசாந்த் தான், ஆனால் தன்னுடைய கதை தேர்வில் சொதப்பி ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்தார்.

அதனால் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்தார், இப்படி தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்ததால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். பின்பு விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் கைகொடுக்கவில்லை.

பிரசாந்த் சினிமாவில்தான் தோல்வியை சந்தித்தார் என்றால் சொந்த வாழ்க்கையிலும் பல ஏமாற்றங்களை தான் சந்தித்தார். சொல்லப்போனால் வாழ்க்கையில் நடந்த சில பிரச்சனைகளால் தான் சினிமா வாழ்க்கையே பறி போனது என்று கூட கூறலாம். இப்படி சினிமா வாழ்க்கையும் திருமண வாழ்க்கையும் அடிபட்டதால் பிரசாந்த் ஒருவழியாக ஆகிவிட்டார்.

இதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் கால் தடம் பதித்து முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கிறார், இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கிய மோகன் ராஜா தான் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக முதன் முதலில் நடிப்பதற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் நடிகை நயன்தாரா சம்பளமாக 6.5 கோடி கேட்டுள்ளார் கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளாததால், தன்னுடைய மொத்த பட்ஜெட்டையும் 6.5 கோடிக்கு முடித்த பிரசாந்த் திட்டமிட்டு விட்டார். அதனால் நயன்தாராவை படத்தில் இருந்து தூக்கி வீசி விட்டார்.

நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் படக்குழுவினரை இந்த மாத இறுதிக்குள் உறுதி செய்துவிட்டு விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கையாக படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.

பிரசாந்த் அவர்களுக்கு இந்த திரைப்படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.