நயன்தாராவின் முதல் படம் ஐய்யா இல்லிங்க சிம்புவின் இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலில் நடிக்க இருந்தாராம்.!

சிம்பு என்றாலே வம்பு என கூறிய காலம் உண்டு, தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர் என்றால் அதில் சிம்புவும் இருப்பார், தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஒரு காலகட்டத்தில் சிம்புவை காதலித்தார், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார்கள்.

இப்பொழுதும் சிம்பு நயன்தாராவை சுற்றியே சர்ச்சைகள் சுற்றிக்கொண்டே இருக்கிறது, சிம்பு மற்றும் நயன்தாரா காதல் முடிவடைந்த பிறகு தற்போது இருவரும் வேறு ஒருவரை காதலித்து வருகிறார்கள். அதேபோல் இருவரும் அடுத்தடுத்து காதலித்து வருகிறார்கள்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் என்றால் சரத்குமாருடன் ஐயா தான், இந்த திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். ஆனால் நயன்தாரா இதற்கு முன் சிம்புவுடன் தொட்டி ஜெயா திரைப்படத்தில் நடிக்க இருந்தாராம். அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்பு மற்றும் நயன்தாரா முதன் முதலில் வல்லவன் படத்தில் ஒன்றிணைந்து நடித்தார்கள் நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருகிறார் இவர் தற்போது நெற்றிக்கண் திரைப்படத்திலும், மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Comment