விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா!! பரபரப்பைக் கிளப்பிய புகைப்படம்..

0

தமிழ் சினிமாவில் அஜித்- ஷாலினி,சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா போன்ற பிரபல ஜோடிகளுக்கு அடுத்ததாக தற்போது கோலிவுட்டில் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தான்.

இவர்கள் நீண்ட காலங்களாக காதலித்து வருகிறார்கள் எனவே விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பயில்வான் ரங்கநாதன் இவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் பிரிந்து விடுவார்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

ஆனால் இதையெல்லாம் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாத நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மிகவும் ஜாலியாக ஊர்சுற்றி ரொமான்ஸ் செய்து வருகிறார்கள். பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.

அந்த அளவிற்கு மிகவும் சந்தோஷமாக ஊர்சுற்றி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது நயன்தாரா வெகு நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராமில் விக்கி நயன் என்று கூறி விக்னேஷ் சிவன் நெஞ்சில் மோதிரம் அணிந்த தனது கையை வைத்து புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு சிலர் உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நயன்தாரா கிறிஸ்டின் என்பதால் அந்த முறையில் திருமணம் செய்து கொண்டார்களோ என்றோம் கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

nayanthara-vigneshsivan-latest-photo
nayanthara-vigneshsivan-latest-photo