ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் என செம ஸ்டைலாக இருக்கும் நடிகை நயன்தாரா.!

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழில் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நேற்று மும்பையில் புகழ்பெற்ற ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றிருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா பலருடைய எதிர்ப்புகளுக்கும், பிரச்சனைகளுக்கும் பிறகு சினிமாவில் தற்பொழுது ஓங்கி நிற்கிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனை குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இந்த தம்பதியினர்கள் திருமணமான சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் தற்பொழுது நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நேற்று மும்பையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பிரபல ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டு உள்ளார். அவர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வரும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

nayanthara 1
nayanthara 1

செம ஸ்டைலாக ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் உடன் விக்னேஷ் சிவனும் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்பொழுது மும்பையில் ஜவான் திரைப்படம் நிலையில் அங்கு விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் நடித்த வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nayanthara 2
nayanthara 2

மேலும் சமீபத்தில் நயன்தாரா குறித்து ஷாருக்கான் அவர்கள் அவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்றும் கிட்டதட்ட எல்லா மொழிகளிலும் அவர் பேசுவார் என்றும் அவருடன் நடித்தது தனக்கு மிகப்பெரிய அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment