நயன்தாரா செய்த செலவை விட வருமானமாக ரூபாய் 25 கோடி அதிகமாக கிடைத்துள்ளதாம்.! எப்படி தெரியுமா.?

viki-and-nayanthara
viki-and-nayanthara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவனை படப்பிடிப்பில் சந்தித்து பேசும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது கிட்டதட்ட ஏழு வருடங்களாக காதலித்து சமீபத்தில் ஜூன் 9 ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.  இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள்,  நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு இவர்களை ஆசீர்வாதம் செய்தனர்.

பிரமாண்டமாக அமைக்கப்பட்ட திருமண ஹோட்டலில் வங்கக் கடலின் ஓரத்தில் ஒரு கண்ணாடி மாளிகை போன்ற ஒரு செட்டை அமைத்தார். அந்தக் கண்ணாடி மாளிகையில் தான் திருமணம் உள்ளிட்ட சடங்கு நடந்தது.  மேலும் 3,500 பேருக்கு விருந்து சாப்பாடு, மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட மேக்கப் மேன்கள் மற்றும் பாதுகாவலர்கள் என கோடிக்கணக்கில் மிகவும் ஆடம்பரமாக செலவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருமணத்தின் மொத்த செலவையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்றும் அதுமட்டுமின்றி நயன்தாராவுக்கு கூடுதலாக அந்நிறுவனம் 25 கோடி ரூபாய் தந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது நயன்தாராவின் திருமணத்தை முழுவதுமாக வீடியோ எடுத்து தனது ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப அனுமதி பெற்றுள்ள நிலையில் நயன்தாராவுக்கு திருமணத்திற்கு செலவு ஒரு ரூபாய் கூட செலவு ஆகவில்லை என்பது மட்டுமின்றி ரூபாய் 25 கோடி வருமானமாக கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.