ஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி!! புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள்.

0

actress nayanthara photo: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் எப்போ கொரோனா முடியும் நயன்தாராவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லலாமென ரொம்ப ஏக்கத்தில் இருந்தார். அதனைக் குறிப்பிடும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோ கொரோனா கோ என பதிவிட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் கோவிலுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செல்வது என வழக்கமாக வைத்திருந்தனர் ஆனால் இந்த கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருந்த இவர்கள் வெளியே எங்கும் போக முடியவில்லை என வருத்தத்தில் இருந்தனர்.

பின்னர் சில வாரங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தின் மூலம் கேரளா சென்றதை அனைவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பார்த்தனர். அதனைதொடர்ந்து தற்போது கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்றுள்ளனர்.

கோவாவில் நயன்தாரா நீச்சல் குளம் அருகே நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ரொம்ப காலம் கழித்து வெக்கேஷனுக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தலைவி முகம் சரியாக தெரியவில்லை நல்ல புகைப்படத்தை பதிவிடுங்கள் என இயக்குனரை கேட்டிருந்தனர்.

மேலும் மற்றொரு ரசிகர் தலைவிக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு எனவும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அப்படியே கோவாவில் கடற்கரையில் அல்லது தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் ஐடியா கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இனையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.