தனது காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. காதலுக்கு முகம் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்..

Actress Nayanthara: இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவியின் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் பொறாமைப் பட்டு வருகின்றனர். தமிழில் சிம்பு, வரலட்சுமி கூட்டணியில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன் இந்த படத்தினை தொடர்ந்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயின் ஆக நயன்தாரா நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு ஆறு வருடங்கள் கழித்து குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கு மாதத்திலேயே வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருந்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். அப்படி சமீபத்தில் நயன்தாரா புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நடிப்பு, பிசினஸ் என பிஸியாக இருந்து வந்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழித்து வருவது வழக்கம்.

actress nayanthara

அப்படி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு காதலுக்கு முகம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இவ்வாறு இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்க விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப் போகும் அதிரடி மாற்றம்..

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது இந்த படத்தின் கதைகளும் சொல்லும் அளவிற்கு இல்லாத காரணத்தினால் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதற்கு முன்பு பாலிவுட்டில் அடி எடுத்து வைத்த நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் அவருடைய கேரக்டர் பாராட்டப்பட்டது.

actress nayanthara
Exit mobile version