பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகிகள் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்று அப்படி அழகாக இல்லை என்றாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்ஜரி செய்து செயற்கையாக அழகாக மாறி வருகின்றனர். இவ்வாறு தற்பொழுது இருக்கும் நடிகைகள் செயற்கையாக அழகாக மாறினாலும் 90 கால கட்ட ஹீரோயின்கள் இயற்கையாகவே அழகாக இருக்கக்கூடியவர்கள்.
அந்த அளவிற்கு மேக்கப் கூட போடாமல் நடித்தாலும் ரசிகர்களை மனதை கவர்ந்து இருக்கின்றனர். ஏன் இவர்கள் செயற்கை நோக்கி சென்றதில்லை என்று குறித்து 90ஸ் கிட்ஸ் நடிகை கூறியுள்ளார். மிகவும் எளிதாக கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருந்து வந்த இந்த நடிகைக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உடல் எடையை ஏற்ற வேண்டும் என்பதற்காக ஸ்டிராய்டு ஊசியை போட்டுக் கொண்டதாக சமீப பேட்டியில் கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை பிரபல நடிகை நளினி தான். முரளி, விஜயகாந்த், மோகன் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நளினி பிறகு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பல வெற்றி திரைப்படங்களை தந்து வந்தாலும் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்கவில்லை அதேபோல் எதார்த்தமான வாழ்க்கையை விரும்பியுள்ளார். அதாவது இவர் பல வெற்றி திரைப்படங்கள் கொடுத்தாலும் தனக்கு சினிமாவில் நடித்தது பிடிக்கவில்லை எதார்த்தமான வாழ்க்கை வாழவே விரும்பினேன் எனவும் தனது அம்மா உடல் எடை விஷயத்தில் ரொம்பவும் கண்டிப்புடன் இருந்து கொண்டதாகவும் சாப்பிடுவதற்காகவே திருமணம் செய்துக் கொண்டேன் எனவும் பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் ராமராஜனை விவாகரத்து பெற்று பிரிந்த நளினி தொடர்ந்த சின்னத்திரையில் நடித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் எடை கூடியதனால் தான் பயங்கர குண்டாக இருந்து வருகிறார். எனவே தனக்கு உடல் எடை கூடியதற்கு காரணமே தான் போட்டுக் கொண்ட ஸ்டிராய்டு ஊசி தான் என்றும் அதை விருப்பப்பட்டே போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு இவருடைய மகளும் இதற்கு மேல் உடல் எடையை குறைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? பிடித்ததை சாப்பிடுங்கள் என கூறினாராம். இவ்வாறு நளினி எந்த விவரமும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் அவருக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்து ஒரு அம்மாவாக தன்னை பார்த்துக் கொள்வதாக தனது மகள் குறித்து பெருமையாக கூறியுள்ளார்.