அட நம்ம பானுவா இது.. இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.!

Actress Muktha: ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து திரைப்படங்களையும் நடித்து வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனவர்கள் பலர் இருக்கின்றனர்.

அப்படி தாமிரபரணி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகையின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பானு 2007ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நடிகை பானு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை எனவே சினிமாவை விட்டு விலகினார். கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Actress Muktha
Actress Muktha

இப்படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகிய நடிகை பானு கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு கியாரா என்ற பெண் குழந்தைக்கு உள்ளது. இவ்வாறு சினிமாவை விட்டு விலகிய பானு சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.

Actress Muktha
Actress Muktha

அப்படி இவர் தொடர்ந்து தனது குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பானுவியின் தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தாமிரபரணி நடிகையா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

Actress Muktha
Actress Muktha